காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு


காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:26 PM IST (Updated: 10 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபரை வெட்டிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே மூங்கில் ஊராணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ராஜலட்சுமி(வயது 19). இவர் சிவகங்கையில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து வந்தார்.அப்போது மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த பிரகாசும்(21), ராஜலட்சுமியும் ஒருவரையொருவர் காதலித்தனர்.இவர்களது காதலுக்கு ராஜலட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் கூப்பிட்டு ராஜலட்சுமி பெற்றோர் எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ராஜலட்சுமி கடந்த 22.8.2020 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் வேதனை அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் காதலி வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த காதலியின் தம்பி சதீஷ்குமாரை(19) வாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரகாஷ், அவரது நண்பர்கள் ரவி, வெங்கடேஷ், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story