கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறியதாக 160 பேரின் வாகனங்கள் பறிமுதல்


கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறியதாக 160 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:02 PM GMT (Updated: 10 Jun 2021 6:02 PM GMT)

கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறியதாக 160 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிணத்துக்கடவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

 இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், பழைய பஸ் நிறுத்தம், சிக்கலாம் பாளையம், கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தேவையின்றி வெளியே சுற்றிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து 160 வாகனங்கள் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 80 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story