சிங்கம்புணரி வட்டாரத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


சிங்கம்புணரி வட்டாரத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 Jun 2021 6:06 PM GMT (Updated: 10 Jun 2021 6:06 PM GMT)

சிங்கம்புணரி வட்டாரத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வட்டார பகுதியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் உள்ளனர். சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை, மல்லாக்கோட்டை, ஏரியூர், சூரக்குடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது தடுப்பூசி இல்லாததால் போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. சிங்கம்புணரி வட்டாரத்தில் மட்டும் இதுவரை 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டு கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையால் தினமும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பி செல்கிறார்கள். தடுப்பூசி டோஸ் வந்ததும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிங்கம்புணரி பொதுமக்கள் கூறும் போது, சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story