மாவட்ட செய்திகள்

நன்னிலம் அருகே லாரி மோதி போலீ்ஸ்காரர் படுகாயம் தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு + "||" + Larry Moti policeman near Nannilam webcast for fleeing driver who was critically injured

நன்னிலம் அருகே லாரி மோதி போலீ்ஸ்காரர் படுகாயம் தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு

நன்னிலம் அருகே லாரி மோதி போலீ்ஸ்காரர் படுகாயம் தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
நன்னிலம் அருகே லாரி மோதி போலீஸ்காரர் படுகாயமடைந்தார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நன்னிலம்,

நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார். இவர் கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தார். இந்தநிைலயில் நேற்று காலை 11 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்காகோட்டூர் அருகே வளப்பாற்றுபாலம் எதிரே பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.


போலீஸ்காரர் படுகாயம்

இதில் தூக்கி வீசப்பட்ட செல்வக்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது அவரது மோட்டார்சைக்கிள் லாரியின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வக்குமாருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்தை ஏற்படு்த்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2. கொள்ளிடம் அருகே மதுக்கடையில் துளையிட்டு 67 மதுபாட்டில்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொள்ளிடம் அருகே மதுக்கடையில் துளையிட்டு 67 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
3. மணல் கடத்தல், மதுபான விற்பனையை தடுக்க நீடாமங்கலம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
மணல் கடத்தல், மதுபான விற்பனையை தடுக்க நீடாமங்கலம் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது நண்பருக்கு வலைவீச்சு
தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது நண்பருக்கு வலைவீச்சு.
5. காதல் திருமணம் செய்ததில் முன்விரோதம்: சென்னை என்ஜினீயர் குத்திக்கொலை மைத்துனர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சென்னை என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.