நாங்குநேரி தொகுதியில் பொதுமக்களிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குறை கேட்பு
நாங்குநேரி தொகுதியில் பொதுமக்களிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.
இட்டமொழி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி பஞ்சாயத்து மற்றும் தளவாய்புரம் பஞ்சாயத்துகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் சீவலப்பேரி பஞ்சாயத்தில் உள்ள எஸ்.என்.பள்ளிவாசல், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், ராஜபுதூர் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார். பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இடையன்குளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் நடந்த காய்ச்சல், சளி, இருமல், கொரோனா தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் களக்காடு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ், தனபால், மாவட்ட துணைத்தலைவர் செல்லபாண்டியன், கிராம காங்கிரஸ் தலைவர்கள் பால்பாண்டி, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story