பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அதன் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முகமது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் சலீம் தீன், செயலாளர் ஆட்டோ செய்யது, பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதே போல் மேலப்பாளையத்தில் 10 வார்டுகள், பாளையங்கோட்டை பகுதி, நெல்லை பகுதிகளில் டவுன், பேட்டை, சுத்தமல்லி, தாழையூத்து, பர்கிட் மாநகரம், மானூர் பகுதிகளில் சீதைகுறிச்சி, தெற்குபட்டி, குறிச்சி குளம், பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வள்ளியூர்- களக்காடு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, துலுக்கர்பட்டி கிளை தலைவர் தவுபிக் அக்பர்ஷா தலைமை தாங்கினார். துலுவை எஸ்.எம்.ஒயிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. துலுக்கர்பட்டி சமூக ஊடக அணி தலைவர் முகமது ஆசிக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி பொறுப்பாளர் நவாப்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் நகர தலைவர் ஜாபர் முகம்மது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா, மற்றும் நகர செயலாளர் பீமாஸ் உசேன், இணை செயலாளர் ராஜா, துணை தலைவர் கமாலுதீன் மற்றும் பொருளாளர் பேராசிரியர் முகம்மது மதார் ஆரிப், யூனுஸ், ஷப்ராஸ், இம்ரான், கபிர், ஷாருக்கான், பிலால் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்கள் சமுக இடைவெளியை பின்பற்றி கையில் பதாகை ஏந்தி முக கவசம் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story