மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாத 721 பேருக்கு அபராதம் + "||" + 721 fined for not wearing mask

முககவசம் அணியாத 721 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 721 பேருக்கு அபராதம்
நெல்லை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 721 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்ததாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 13 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 721 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 4 பேருக்கும் அபராதம் விதித்தனர்.