விக்கிரமசிங்கபுரம் அருகே எருமை மாட்டை தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே எருமை மாட்டை தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைடியவாரத்தில் அமைந்துள்ளது கோரையார்குளம் கிராமம். விவசாய கிராமமான இங்கு ஆடு, மாடுகளை வனப்பகுதியின் அருகில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தில் மேய விடுவது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் மாடுகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது காலை சுமார் 11 மணிக்கு வனப்பகுதிக்குள் இருந்து சிறுத்தை ஒன்று வந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருமை மாட்டை தாக்கியது. அப்போது அங்கு மேய்ச்சலில் நின்று கொண்டிருந்தவர்கள் சத்தம் போடவும் மாடு திமிறவுமாக இருந்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் லேசான நகக்கீரலுடன் மாடு அதிர்ஷ்டவசமாக தப்பியது. தப்பிய மாடு வேம்பையாபுரம் தெற்கு தெரு காலனியை சேர்ந்த மாரியப்பன் (48) என்பவருக்கு சொந்தமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story