மாவட்ட செய்திகள்

நெல்லையில் 267 பேருக்கு கொரோனா + "||" + Corona for 267 people in Nellai

நெல்லையில் 267 பேருக்கு கொரோனா

நெல்லையில் 267 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 ஆயிரத்து 607 பேர் குணமடைந்து உள்ளனர். 3 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனாவுக்கு நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 61 வயது முதியவர், 48 வயது, 74 வயது பெண்கள் மற்றும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த 60 வயது பெண் ஆகியோர் ஆவர். இதுவரை கொரோனாவுக்கு 380 பேர் பலியாகி உள்ளனர்.