மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் பீடி இலைகள் திருட்டு; 7 பேர் கைது + "||" + Rs 3.76 lakh beedi leaves stolen near Alangulam; 7 people arrested

ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் பீடி இலைகள் திருட்டு; 7 பேர் கைது

ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் பீடி இலைகள் திருட்டு; 7 பேர் கைது
ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை திருடிச் சென்றதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் அருண்தங்கம் என்பவருக்கு சொந்தமான பீடி குடோன் உள்ளது. கடந்த 5-ந்தேதி இந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.3.76 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் பீடி கட்டுகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அருண் தங்கம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த திருட்டில் நல்லூரை சேர்ந்த வைத்திலிங்கம் (வயது 42), காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த கணேஷ் பிரபு (36), ஆலங்குளத்தை சேர்ந்த வைத்திலிங்கம் (29), முத்துராஜ் (30), சொரிமுத்து (35), இசக்கிமுத்து (28), குருவன்கோட்டையை சேர்ந்த லிங்கம் (40) ஆகிய 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்குறுங்குடியில் ஊரடங்கை மீறிய 7 பேர் கைது
திருக்குறுங்குடியில் ஊரடங்கை மீறிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஆவூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஆவூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
3. தனியார் பள்ளி நிர்வாகியை கடத்தி ரூ 4 லட்சம் பறிப்பு அண்ணன் மகன் உள்பட 7 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் வீ்ட்டுமனை வாங்குவதாக கூறி வரவழைத்து தனியார் பள்ளி நிர்வாகியை கடத்தி ரூ 4 லட்சத்தை பறித்த அவரது அண்ணன் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. இருதரப்பினர் மோதல்; 7 பேர் கைது
இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. மது விற்ற 7 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.