இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு
இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் தமிழ்செல்வியிடம் மருத்துவமனை பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பு முககவசம், கையுறைகளை வழங்கினார். அதனை தொடா்ந்து சுகாதார நிலையத்திற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் குடிநீர் வசதிக்காக தனது சொந்த செலவில் ஆழ்துளை அடிபம்பை உடனடியாக மாற்றி அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். ஆய்வின் போது, வட்டார சுகாதார மேற்பார்வையாளா் கதிரவன், செங்கோட்டை ஒன்றிய செயலாளா் செல்லப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். செங்கோட்டை அருகே உள்ள செ.புதுார் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நகரப்பஞ்சாயத்து முதன்மை அலுவலர் தமிழ்மணியிடம் நகரப்பஞ்சாயத்து பகுதியில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைதொடா்ந்து துாய்மை பணியாளா்களுக்கு முககவசம், கையுறைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story