மாவட்ட செய்திகள்

சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீர் சாவு + "||" + Sudden death of paddy harvester driver near Sivagiri

சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீர் சாவு

சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீர் சாவு
சிவகிரி அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் திடீரென இறந்தார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ஆலடிபட்டி பிள்ளையார் கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலகிருஷ்ணன் (வயது 28). இவர் நெற்கதிர் அறுவடை செய்யும் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை சிவகிரி அருகே விசுவநாதப்பேரியில் உள்ள ஒரு வயலில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் அறுவடை எந்திரத்தில் இருந்தபடியே திடீரென மயங்கிய நிலையில் சாய்ந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் சாவு
ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.
2. தொழிலாளி திடீர் சாவு
நெல்லை அருகே தொழிலாளி திடீரென்று இறந்தார்.
3. கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு
நெல்லையில் கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீரென இறந்தார்.
4. சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
5. கார் டிரைவர் திடீர் சாவு
கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்