தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி இலவசமாக ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். தேவையான சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சரணவனிடம் மனு அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story