அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை; போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை, போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டு என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கு காவல்துறையின் சேமநல நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு ரூ.18 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதனை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வழங்கினார்.
Related Tags :
Next Story