சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 1:35 AM IST (Updated: 11 Jun 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.7,500 கொரோனா நிதிஉதவி வழங்க வேண்டும், 3 வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்டோ சங்க பொருளாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.பி.ரவி, எஸ்.கந்தன், போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் ஜி.அமல்ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story