மின்வேலியில் சிக்கி மாடு செத்தது


மின்வேலியில் சிக்கி மாடு செத்தது
x
தினத்தந்தி 11 Jun 2021 1:58 AM IST (Updated: 11 Jun 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மாடு செத்தது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சி பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுதுரை (வயது 50). விவசாயியான இவர் வயலிலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது பட்டியில் கட்டியிருந்த பசுமாடு ஒன்று நேற்று இரவு கயிறு அறுந்த நிலையில், அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது நெல் வயலுக்கு சென்றது. அங்கு எலி தொல்லையை தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி பசு மாடு பரிதாபமாக செத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story