5 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; வாலிபர் கைது


5 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 1:59 AM IST (Updated: 11 Jun 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

5 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் வளவனேரி அருகே வாழதோப்பு கிராமத்தில் உள்ள மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் பாபு (வயது 30). இவர் வீட்டின் முன்பு சாராய ஊறல் போட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆனந்த்பாபு வீட்டின் முன்பு சோதனை செய்தபோது, 5 லிட்டர் சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் ஆனந்த்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story