வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அரியலூர்:
துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்
அரியலூர் புதுமார்க்கெட் 6-வது தெருவில் வசிப்பவர் சுரேஷ். நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்கு பசும்பலூர் சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
நகைகள் திருட்டு
அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுபற்றி அரியலூர் போலீசில், சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story