புதிதாக 294 பேருக்கு கொரோனா


புதிதாக 294 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2021 2:12 AM IST (Updated: 11 Jun 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 37,968 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 நேற்று மட்டும் 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,414 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 பேர் பலி 
கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,191 படுக்கைகள் உள்ள நிலையில் 682 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 509 படுக்கைகள் காலியாக உள்ளன.
 சிகிச்சை மையங்களில் 1,553 படுக்கைகள் உள்ள நிலையில் 394 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1159 படுக்கைகள் காலியாக உள்ளன. 
5 சதவீதம் பாதிப்பு 
விருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர், கலைஞர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அரசு ஆஸ்பத்திரி, சத்திர ரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம,் சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, சுந்தரராஜபுரம், கிருஷ்ணன்கோவில், மல்லாங்கிணறு, சூரம்பட்டி, முடுக்கன்குளம், புலியூரான், ஆத்திப்பட்டி, கல்லு மடம், நாரணாபுரம், புதூர், சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், முகவூர், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 நேற்று மாநிலப்பட்டியலில் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 121 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளது.

Next Story