செல்போனில் விளையாடியதை அண்ணன் கண்டித்ததால் கல்லக்குடி அருகே பரிதாபம்


செல்போனில் விளையாடியதை அண்ணன் கண்டித்ததால் கல்லக்குடி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 11 Jun 2021 2:25 AM IST (Updated: 11 Jun 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி அருகே செல்போனில் விளையாடியதை அண்ணன் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


கல்லக்குடி, 
கல்லக்குடி அருகே செல்போனில் விளையாடியதை அண்ணன் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 52). இவருடைய மனைவி சுமதி(40). இருவரும் விவசாய கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு மணிகண்டன்(21), தயாநிதிமாறன்(17), கலைநிதிமாறன்(12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 
இதில் மணிகண்டன் தனியார் கல்லூரியில் பி.டெக். 4-ம் ஆண்டும், கலைநிதிமாறன் புள்ளம்பாடி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

 தயாநிதிமாறன் தனியார் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிைலயில் நேற்று முன்தினம் இரவு தயாநிதிமாறன் தனது அண்ணனின் செல்போனை எடுத்து விளையாடியுள்ளார். இதை அவருடைய அண்ணன் கண்டித்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மனமுடைந்த தயாநிதிமாறன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துவிட்டார்.  பின்னர், தூங்கிக்கொண்டிருந்த தந்ைதயை எழுப்பி நடந்த விவரங்களை கூறி, தான் தற்கொைல செய்து கொள்ள பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறி  அழுதுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர், மகனை மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுபற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார், தயாநிதிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story