துவரங்குறிச்சி அருகே 4 டன் எடையிலான ஒரே கல்லில் உருவான யானை சிலை மதுரைக்கு அனுப்பி வைப்பு
துவரங்குறிச்சி அருகே 4 டன் எடையிலான ஒரே கல்லில் உருவான யானை சிலை மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துவரங்குறிச்சி,
துவரங்குறிச்சி அருகே 4 டன் எடையிலான ஒரே கல்லில் உருவான யானை சிலை மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், கல்லுப்பட்டி கிராமத்தில் கற்சிலை வடிவமைக்கும் சிற்பக்கூடம் நடத்தி, பல வருடங்களாக சிற்பங்கள் செய்து வருகிறார். இந்தநிலையில் மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள ஒரு கோவிலுக்கு யானை சிலை செய்ய ஆர்டர் வந்தது. அதன்படி, 4 டன் எடையிலான ஒரே கல்லில் 3 அடி அகலம், 7½ அடி நீளம், 5 அடி உயரத்தில் அழகான யானை சிலையை வடிவமைத்தார். அது நேற்று சிறப்பு பூஜைகள் செய்து மதுரைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story