பால்கோவா தயாரிக்கும் பணி ஊரடங்கால் முடங்கியது
ஊரடங்கால் பால்கோவா தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஊரடங்கால் பால்கோவா தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால்கோவா
பால்கோவா என்றாலே அனைவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் நிைனவுக்கு வரும். அந்த அளவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சிறப்பு பெற்று விளங்குகிறது.
இவ்வாறு சிறப்பு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா முழு ஊரடங்கு காரணமாக தயாரிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
குடிசைத்தொழில்
ஆதலால் இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தற்போது வேலை இல்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இல்லை. இங்கு முக்கிய தொழிலாக விவசாயமும், அதற்கு அடுத்தபடியாக பால்கோவா தயாரிக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட சிலரே தயாரித்திருந்த பால்கோவா இன்று குடிசை தொழில் போல் எண்ணற்ற பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரணம்
இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு அறிவித்துள்ளதால் பால்கோவா தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
எனவே வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story