மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 453 பேருக்கு கொரோனாஒருவர் பலி + "||" + corona increases

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 453 பேருக்கு கொரோனாஒருவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 453 பேருக்கு கொரோனாஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 453 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி முதியவர் ஒருவர் பலியானார்.
453 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 38,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் நாமக்கல் மாவட்ட பட்டியலில் இருந்து 8 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,459 ஆக ஆனது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 453 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,912 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 893 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
முதியவர் பலி
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 336 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று கொரோனாவுக்கு 75 வயது முதியவர் ஒருவர் பலியானார்.
அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 33,108 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 5,467 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
========

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,444 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,444 ஆக அதிகரிப்பு
2. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு
3. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,831 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,831 ஆக அதிகரிப்பு
4. நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை 2 வீடுகள் இடிந்தன: 3 பேர் உயிர் தப்பினர்
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்தன. 3 பேர் உயிர் தப்பினர்.
5. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 ேபர் பலியாகி உள்ளனர்.