சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 14 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை நோய்க்கு 158 பேர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளது. இதில் 12 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story