கொரோனா வைரஸ் தொற்றால் 2 வீதிகள் அடைப்பு


கொரோனா வைரஸ் தொற்றால் 2 வீதிகள் அடைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 3:17 AM IST (Updated: 11 Jun 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரே குடியிருப்பு பகுதியில் வெவ்வேறு வீதியில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த 2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

உடுமலை
உடுமலையில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரே குடியிருப்பு பகுதியில் வெவ்வேறு வீதியில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த 2 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
14பேருக்கு கொரோனா
உடுமலை நகராட்சி பகுதியில் கடந்த 7-ம் தேதி 21 பேரும், 8-ம்தேதி 17 பேரும், 9-ம் தேதி 14 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த 3நாட்களாக அடுத்தடுத்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ள நிலையில், சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
உடுமலை நகராட்சி பகுதியில் ஒரே வீதியில் 3 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த வீதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு வருகிறது. அதன்படிகடந்த8ம்தேதி மொத்தம் பாதிக்கப்பட்ட 17 பேரில், உடுமலை பழனியாண்டவர் நகரில் ஒரே வீதியில்3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டதால்அந்தவீதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.
வீதிகள் அடைப்பு
இதேபோன்று உடுமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட டி.வி.பட்டிணத்தில் ஒரே வீதியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த வீதியும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உடுமலை நகராட்சிபகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் தில்லை நகருக்கு அருகில் உள்ள மாரியப்பா லே.அவுட் குடியிருப்பு பகுதியில் ஒரு வீதியில் 4 பேருக்கும், மற்றொரு வீதியில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து நேற்று மாரியப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியில் அந்த 2வீதிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
இந்த பணிகள் நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரிசரவணன், சுகாதார ஆய்வாளர்கள் பி.செல்வம், சீனிவாசன், ராஜ்மோகன், ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தடுப்புகள் வைத்துஅடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸ்மற்றும் ஊர்க்காவல் படை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story