கோயம்பேட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வாலிபரால் பரபரப்பு
கோயம்பேடு காளியம்மன் கோவில் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
பூந்தமல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று கோயம்பேடு காளியம்மன் கோவில் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்களில் எதிர்திசையில் வந்தார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை பிடித்து, “இது ஒரு வழிப்பாதை. எதற்காக எதிர்திசையில் வந்தீர்கள்?” என கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், “எனக்கு முன்னால் சென்ற வாகனங்களை அனுமதித்து விட்டு என்னை மட்டும் ஏன் மடக்கி பிடித்தீர்கள்?” என்று கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story