பெரியமேட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு கொள்ளையர்கள் அட்டூழியம்


பெரியமேட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:07 AM IST (Updated: 11 Jun 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளையர்கள் சிலர், நான்கைந்து கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். 2 கடைகளில் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

சென்னை, 

சென்னை பெரியமேடு பகுதியில் கொள்ளையர்கள் சிலர், நான்கைந்து கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். 2 கடைகளில் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர். பெரியமேட்டில் மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் உள்ள மணிமாறன் என்பவரின் மளிகை கடையில் ரூ.35 ஆயிரம் மற்றும் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டனர்.

அருகில் உள்ள இன்னொரு கடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் அந்த கடையில் திருடுவதற்கு எதுவும் சிக்கவில்லை. அடுத்து அதே தெருவில் தோல் கம்பெனி ஒன்றிலும் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கும் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள பெரியண்ண மேஸ்திரி தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்துள்ளனர். அங்கு ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் அள்ளிக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு நடந்த கொள்ளையர்களின் இந்த அட்டூழியம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story