பாலியல் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது


பாலியல் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 11 Jun 2021 5:02 AM GMT (Updated: 11 Jun 2021 5:02 AM GMT)

சென்னை அண்ணா நகரில், பாலியல் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ் (வயது 40). முன்னதாக இவர், தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக்கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் இளம்பெண் ஒருவர், தான் பள்ளியில் பயின்றபோது விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர் அழைத்து செல்லும்போது தனக்கு கராத்தே மாஸ்டர் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். நேற்று இன்ஸ்பெக்டர் லதா, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினார். கராத்தே மாஸ்டர் கெபிராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.


Next Story