கோடியக்கரையில் கருவேலமரங்கள் தீப்பிடித்து எரிந்தது
கோடியக்கரை புயல் பாதுகாப்பு கட்டிடத்தின் அருகில் ஊராட்சி சொந்தமான பகுதியில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள் நேற்று தீப்பிடித்து எரிந்தது.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான புள்ளிமான், குதிரை, நரி, குரங்கு, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தையொட்டி உள்ள கோடியக்கரை புயல் பாதுகாப்பு கட்டிடத்தின் அருகில் ஊராட்சி சொந்தமான பகுதியில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள் நேற்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், வனவர் சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர், மேலும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் அலுவலர் கந்தசாமி தலைமையில் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் வனப்பகுதியில் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story