மாவட்ட செய்திகள்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நாகூரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு + "||" + Echo of 'Daily thanthi' news: In Nagore, motorcycles seized by the police were handed over to the owners

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நாகூரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: நாகூரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நாகூரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகூர், 

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தேவை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாகூர் போலீசார் வாஞ்சூர் சோதனை சாவடி, கொத்தவால் சாவடி, கிழக்கு கடற்கரை சாலை, நாகூர்-நாகை சாலை, நாகூர்-கங்காளச்சேரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் கடந்த 14 -ந் தேதி முதல் 260 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து நாகூர் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து உரிமையாளர்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று செய்தி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக உயர்அதிகாரிகள் நாகூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடந்த 14-ந் தேதி முதல் 24-ந் வரை பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒப்படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.