கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை


கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 2:49 PM GMT (Updated: 11 Jun 2021 2:49 PM GMT)

ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க தலைவர் செந்தில்வேலு மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி விற்பனை கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோக்களை இயக்க கட்டுப்பாடுகள் உள்ளது. அதிலும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் கடனுதவி பெற்றே ஆட்டோக்களை வாங்குகின்றனர். ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் அவர்களால் கடன் தொகையை செலுத்த இயலவில்லை. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை கடன் தவணை செலுத்துவதில் இருந்து ஆட்டோ டிரைவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story