மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி + "||" + In Dindigul district Black fungal symptoms in 2 more people

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி காணப்பட்டது.
திண்டுக்கல்:
கொரோனாவின் 2-வது அலையில் ஏராளமானோருக்கு தொற்று ஏற்பட்டது. நுரையீரலில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கொரோனாவில் இருந்து மீண்டு உயிர் பிழைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. இதற்கிடையே கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை எனும் நோய் அதிகமாக தாக்கி வருகிறது.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. அதில் ஒருவர் இறந்து விட்டார். மீதமுள்ள 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கொரோனா தொற்று ஏற்படாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கும், நிலக்கோட்டை பகுதியில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த பரிசோதனை முடிவு வந்த பின்னரே கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். அதேநேரம் கொரோனா தொற்று இல்லாத நபருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.