கண்ணமங்கலம் அருகே; அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மர்மச்சாவு


கண்ணமங்கலம் அருகே; அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 11 Jun 2021 9:59 PM IST (Updated: 11 Jun 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே அரசு செவிலியர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலைசெய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே அரசு செவிலியர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலைசெய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவிலியர்

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் காமேஸ்வரம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி செவிலியராக பணி புரிந்து வந்தார்.  

கடந்த 6-ந் தேதி புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, 9-ந் தேதி மீண்டும் வண்ணாங்குளம் கிராமத்திற்கு வந்துள்ளார். 

பிணமாக கிடந்தார்.

இந்த நிலையில் வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சவுந்தர்யா பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்தபொதுமக்கள் இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து சவுந்தர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து  சவுந்தர்யாவின் தம்பி அய்யனார் (24) கண்ணமங்கலம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யா தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story