மாவட்ட செய்திகள்

மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை + "||" + minister geethajeevan warns financial institutions

மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை

மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:
கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன் வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு ஆஸ்பத்திரிக்கு உபகரணங்கள்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெட்சர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். அவரிடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீராம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். இவற்றை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நேருவிடம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ உபகரணங்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டலத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் சேவை உள்ளம் கொண்ட அனைவரும் அதிகமான அளவில் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.
இதுவரை 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு உள்ளது. அவைகள் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு கொரோனா தொற்று நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.
தன்னிறைவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் ஓய்வின்றி கொரோனா பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்த்து வைத்துள்ளார். இன்று நாம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்றிறைவு பெற்றுள்ளோம்.
பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தேவையான கருவிகளை வழங்கி உள்ளார்கள். முககவசம், சானிடைசர், பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் வழங்கி வருகிறார்கள். மெத்தை, பல்வேறு மருந்து பொருட்களையும் வழங்குகிறார்கள். மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நடவடிக்கை
தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் மட்டும் 750 படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 318 ஆக குறைந்துள்ளது. தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இனி வருங்காலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் வகையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் அதிகப்படுத்தபட்டு உள்ளது. நம்முடைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ஹன்சராஜ், வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் ஆன்டனி தனபால், மண்டல வள அலுவலர் அலெக்ஸ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நிவாரண உதவி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலமாக கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, கோவில்பட்டி நகரசபை அலுவலக அரங்கில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கடன்தொகை வசூலிப்பதில்...
ஊரடங்கு காரணமாக நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பதில் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார். நிதி நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதையும் மீறி செயல்படும் நிதிநிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியில் பெண்களை கடன் தவணை செலுத்த கட்டாயப்படுத்திய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். மகளிர் குழுக்களை வற்புறுத்தி கடன்தொகை வசூலிப்பதில் ஈடுபட்டால் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசி தொடர்பாக தற்போதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கான மத்திய அரசு ஒதுக்கீடு குறைவாக உள்ளதால், முதல்-அமைச்சர் அதனை கேட்டு பெற்று வருகிறார். நாளைக்கு கூட தூத்துக்குடி மாவட்டத்துக்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கிறோம்.
தாய்-தந்தையை இழந்த...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்போம் என மத்திய அரசுக்கு முன்னதாகவே தமிழக முதல்-அமைச்சர் திட்டங்களை அறிவித்து விட்டார். அதன்படி கிராமப்புற பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான இணையதளத்தில் கணக்கெடுப்பு தொடர்பாக தினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 69 பேர் தாய் தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். 2,240 குழந்தைகள் ஒரு பெற்றோரை இழந்தவராக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வைப்புத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.