கோவில்பட்டியில் 3 கடைகளுக்கு சீல் வைப்பு நகரசபை அலுவலர்கள் நடவடிக்கை


கோவில்பட்டியில் 3 கடைகளுக்கு சீல் வைப்பு  நகரசபை அலுவலர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 10:04 PM IST (Updated: 11 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனா ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு நகரசபை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கொரோனா ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு நகரசபை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கிறது. காய்கறி, பலசரக்கு கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
கோவில்பட்டி நகரில் கொரோனா ஊரடங்கு விதி முறைகளை மீறி பாத்திர கடைகள், பேன்சி ஸ்டோர்கள், செல் போன் ரீ சார்ஜ், செருப்பு கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடப்பதாக புகார்கள் எழுந்தது.
இதை தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்படும் கடைகளை பூட்டி சீல் வைக்குமாறு நகரசபை ஆணையாளர் ராஜாராம் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
3 கடைகளுக்கு சீல்
இதனை யொட்டி நகரசபை சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளி ராஜ், காஜா நஜ்முதீன், வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் ஊழியர்கள் நகரில் ஆய்வு நடத்தினர். அப்போது கொரோனா விதி முறைகளை மீறி திறக்கப்பட்டு இருந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அந்த கடைகளை திறந்து வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களுடன், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் உள்ளிட்டோரிடம் மொத்தமாக ரூ.10 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Next Story