திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கண்காணிப்பு அதிகாரி கணேசன் அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கண்காணிப்பு அதிகாரி கணேசன் அறிவுரை வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கண்காணிப்பு அதிகாரி கணேசன் அறிவுரை வழங்கினார்.
கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் திருப்பூர் மாநகராட்சி கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கண்காணிப்பு அதிகாரி கணேசன், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் ஆகியோர் மங்கலம் ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த பகுதியில் 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதியை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வெளியே வரவேண்டாம்
பின்னர் மாஸ்கோ நகர், விவேகானந்தா நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியை ஆய்வு செய்து, விவரங்களை கண்காணிப்பு அதிகாரி கேட்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரவேண்டாம். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கண்காணிப்பு அதிகாரி கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசிய பொருட்கள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மேலும் தன்னார்வலர்களும் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆய்வில் போலீஸ் உதவி கமிஷனர்கள் வெற்றிவேந்தன், நவீன்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், மாநகராட்சி பொறியாளர் ரவி, மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், உதவி ஆணையாளர் வாசுகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story