கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் ஏர்கலப்பையை கொண்டு களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் ஏர்கலப்பையை கொண்டு களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
x
தினத்தந்தி 11 Jun 2021 10:26 PM IST (Updated: 11 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் ஏர்கலப்பையை கொண்டு களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தளி
கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் ஏர்கலப்பையை கொண்டு களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி பணி
உடுமலையில் சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தண்ணீர் வசதிக்கு ஏற்றவாறு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. அமராவதி அணை பாசனத்தில் கரும்பு, நெல் மற்றும் ஆங்காங்கே தென்னை சாகுபடியும் நடைபெறுகிறது. திருமூர்த்தி அணையின் பி.ஏ.பி. பாசனத்தில் காய்கறிகள், தானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அது தவிர கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் சாகுபடி பணிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. ஆண்டு பயிர்களான வாழை, கரும்பு நடவு செய்யும்போது ஆட்கள் தேவை அதிக அளவில் இருக்கும். அதே போன்று அறுவடையின்போது மீண்டும் ஆட்கள் உதவி தேவைப்படும். ஆனால் காய்கறிகள், தானியங்கள் சாகுபடியில் நாள்தோறும் கூலிஆட்கள் தேவை இருந்து கொண்டே உள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வருகைக்கு பின்பு பெரும்பாலானோர் விவசாய பணிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் அந்தத் திட்டத்தில் பணி வரையறை செய்யப்பட்டு அதை முடித்தால் போதும் இடையில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் வேலையும் எளிது. விரைவில் வீட்டுக்கு திரும்பி வந்து விடலாம். ஆனால் விவசாயிகள் மேற்கொண்டுள்ள சாகுபடி பணியில் காலை 8 மணிக்கு சென்றால் மதியம் 3 மணி வரையிலும் வெயிலில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் ஓய்வு கிடைக்காது. 
இதனால் பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் குறித்த நேரத்தில் களையெடுத்தல், உரமிடுதல், பராமரிப்பு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்கு முடியவில்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றி விடுவதால் விளைச்சலும் குறைந்து விடுகிறது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றோம்.
விளைச்சல் பாதிப்பு
இயற்கை எப்படி அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்துகிறதோ அதேபோன்று விவசாயியும் தான் விளைவிக்கின்ற பொருட்களை தரமானதாக ஏதாவது ஒரு வழியில் அனைவருக்கும் கொடுத்து உணவு அளித்து வருகிறார். விவசாய வேலைக்கு செல்வதை மறுக்கும் முன்பு உணவை விளைவிக்கின்ற விவசாயியையும் விவசாயத்தையும் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.இதை உணராவிட்டால் நாளடைவில் விவசாய தொழில் முற்றிலுமாக அழிந்து உணவு பற்றாக்குறை ஏற்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.அதை உணர்த்தும் விதமாக அமராவதி அருகே கல்லாபுரம் பகுதியில் கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் மாடுகள் பூட்டிய ஏர்கலப்பை கொண்டு களை எடுத்து வருகின்றோம்.கரும்பு சாகுபடியில் முதல் போகம் அறுவடை செய்த பின்பு களை எடுத்து பராமரித்து அடுத்த போகத்திற்கு கரும்புக்கட்டைகளை தயார் செய்ய வேண்டும்.
விவசாயம் புத்துயிர் பெறுமா?
அதற்கு களை எடுத்தல், மண் அணைத்தல் போன்ற பணிகள் அவசியமானதாகும்.கூலியாட்களை எதிர்பார்த்து நாட்கள் கடந்ததே தவிர வேலை நடைபெறவில்லை.இதையடுத்து கரும்பு கட்டைகளுக்கு நடுவே முளைத்துள்ள களையை இரும்பு ஏர்கலப்பை மூலம் அகற்றி ஓரிரு ஆட்களின் துணையுடன் மண்அணைத்தும் வருகின்றோம்.உயிரை பணயம் வைத்து ஊரடங்கு காலத்தில்கூட பால், பழங்கள், காய்கறிகள் என பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் வழங்கி வந்தோம்.100 நாள் வேலை திட்டத்தின் வரவு எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டுவிட்டது அதை உணர்வார் யாருமில்லை.எனவே மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் திருத்தங்கள் செய்து உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், விவசாயத்தில் நிலவுகின்ற கூலிஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயியையும் விவசாயத்தையும் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.இதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மாபெரும் வரமாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story