வெள்ளகோவிலில் 260 பேருக்கு கொரோனா பரிசோதனை


வெள்ளகோவிலில் 260 பேருக்கு கொரோனா  பரிசோதனை
x
தினத்தந்தி 11 Jun 2021 10:34 PM IST (Updated: 11 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் 260 பேருக்கு கொரோனா பரிசோதனை

வெள்ளகோவில், ஜூன்.12-
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளகோவில் டி.ஆர்.நகர், வி.பி.எம்.எஸ்.நகர், வீரக்குமார் நகர், செம்மாண்டம்பாளையம் ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 
இதில் மொத்தம் நேற்று 260 பேருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story