சிதம்பரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு


சிதம்பரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 10:49 PM IST (Updated: 11 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்.  இவருடைய மகன் மதன் என்கிற மாணிக்கராஜ் (வயது 18). பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை மாணிக்கராஜ், தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள உப்பனாறு பாலம் அருகே ஆற்றில் குளித்து  கொண்டிருந்தார். 

அப்போது மாணிக்கராஜ் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் தண்ணீரின் உள்ளே மூழ்கிய அவரை, திடீரென காணவில்லை.

பிணமாக மீட்பு

 இதையடுத்து அவரது நண்பர்கள், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.   தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாணிக்கராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அதில் அவர் பிணமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story