150 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிப்பு


150 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 10:49 PM IST (Updated: 11 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா 2-வது அலை பரவலின் போது 150 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம், 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் 450 என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று இருந்து வந்த நிலையில் தற்போது 100 முதல் 130 எண்ணிக்கையாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக கர்ப்பிணிகளும் சிறுவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் கொரோனா 2-வது அலை  பரவலின்போது சுமார் 150 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 60 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர்களில் 30 பேருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ளவர்கள் தொடர் பிரசவ சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 150 கர்ப்பிணிகளும் நோய் தொற்றில் இருந்து உரிய சிகிச்சை மூலம் குணம் ஆகி உள்ளனர். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது பிரசவம் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதற்கு காரணம் முறையான சிகிச்சை மற்றும் முன்கால பின்கால முறையான பராமரிப்பு சிகிச்சை போன்ற காரணங்களால் அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தகவலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மலர்வண்ணன் தெரிவித்தார்.

Next Story