67 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்


67 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:50 PM IST (Updated: 11 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 8 நாட்களாகியும், தொடர்ந்து 67 அடியாக வைகை அணை நீர்மட்டம் நீடிக்கிறது.

ஆண்டிப்பட்டி : 


வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, தொடர் மழையால் 67.54 அடியாக உயர்ந்தது. 

இதனையடுத்து கடந்த 4-ந்தேதி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. 


அதே நேரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு கணிசமான நீர்வரத்து ஏற்பட்டது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து கடந்த 8 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், நீர்மட்டம் குறையாமல் கடல்போல் காட்சியளிக்கிறது.
  
67 அடி
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கி உள்ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 67.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 575 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

அணையின் மொத்த நீர் இருப்பு 5 ஆயிரத்து 140 மில்லியன் கன அடியாக இருந்தது.

Next Story