கெலமங்கலம் அருகே கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது-டிரைவர், கிளீனர் காயம்
கெலமங்கலம் அருகே கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில், டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் தும்கூரிலிருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த சண்முகம் (வயது 33) என்பவர் ஓட்டி சென்றார். பசுபதி என்பவர் கிளீனராக உடன் வந்தார். இந்த லாரி கெலமங்கலம் அருகே உள்ள ஒரு அட்டை கம்பெனி பக்கமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
காயம்
இந்த விபத்தில் டிரைவர் சண்முகம், கிளீனர் பசுபதி ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் லாரியில் இருந்த 10 டன் கோழி தீவன மூட்டைகள் சிதறின.
அந்த வழியாக சென்றவர்கள் டிரைவர், கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story