சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 Jun 2021 11:11 PM IST (Updated: 11 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை, ஜூன்.12-
கீரனூர் அருகே நெடுத்தான் பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). சம்பவத்தன்று இவரை அதே பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்ததாக கீரனூர் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முருகானந்தம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முருகானந்தம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் நேற்று போலீசார் அவரை புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு  அடைத்தனர்.

Next Story