பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாயார் அற்புதம்மாள், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை


பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாயார் அற்புதம்மாள், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 11:26 PM IST (Updated: 11 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள், முதல்-அமைச்சருக்கு ‘டுவிட்டர்’ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜோலார்பேட்டை

டுவிட்டரில் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

30 நாள் பரோல்

எனது மகன் 30 ஆண்டு சிறை தண்டனையை பயனுள்ளதாக பயன்படுத்தி, கல்வி படித்து மேலும் சிறையிலிருந்தவர்களுக்கும் கல்வியை கொடுத்தான். இருந்தாலும் சுதந்திரமாக வாழும் வாழ்க்கை இவனுக்கு இல்லை என்ற கவலை எனக்கு உள்ளது. அவனுக்கு எல்லா நோயும் இருக்கிறது. அதற்கு தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதனால் அவன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டு சிறை வாழ்க்கையில் என் மகனின் இளமை வாழ்க்கை, நிம்மதி எல்லாம் போச்சு என்பதைவிட ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதி போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் என் மகனுக்கு  நீண்ட பரோல் தர வேண்டும் என அரசுக்கு விண்ணப்பித்தேன். அரசு 30 நாள் பரோல் வழங்கியது.

 சிறைக்கு செல்லாமல்...

இப்போது என் மகனுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இனிமேல் என் மகன் சிறைக்குப் போகக் கூடாது. 30 ஆண்டு சிறை என்பது எவ்வளவு பெரிய நீண்ட சிறை தண்டனை என்பதை உணர்ந்து ஒரு தாயாக சொல்கிறேன். நீங்கள் என் மகனை சிறைக்கு அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு வேண்டுகோளை தான் நான் வைக்கிறேன்.

இந்த வயதான காலத்தில் என் பிள்ளை எங்களுடன் இருக்க வேண்டும். நான் பரோல் கேட்டவுடன் பரோல் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் அவரை நான் சந்திக்க முடியாமல் உள்ளேன். 
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Next Story