தேவகோட்டை பகுதியில் தினமும் 2 மணி நேரம் மின்தடை


தேவகோட்டை பகுதியில் தினமும் 2 மணி நேரம் மின்தடை
x
தினத்தந்தி 11 Jun 2021 11:40 PM IST (Updated: 11 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளைமறுநாள்(14-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 2 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தேவகோட்டை,

தேவகோட்டை பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளைமறுநாள்(14-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 2 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

தேவகோட்டை மின் உபகோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை மற்றும் பூசலாகுடி துணை மின் நிலையங்களின் வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்பின் போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள்(14-ந்தேதி) உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, தெண்ணீர்வயல், பிரன்டவயல், கண்ணங்கோட்டை, மாரிச்சான்பட்டி, காவனவயல், மொன்னி, இருமதி, திடக்கோட்டை.
 15-ந் தேதி சேவுகன் அண்ணாமலை காலேஜ் எதிரில் அண்ணாநகர், கிருஷ்ணராஜபுரம், காந்தி ரோடு, அம்மச்சிஊரணி பெரிய பள்ளிவாசல் பகுதி, ஒத்தக்கடை, மூட்டாங்குண்டு சிவன் கோவில் ஊர்வயல,் மொட்டையன்வயல், பனங்காட்டான்வயல், கிழக்கு ஊஞ்சனை, மங்கலம், ஆறாவயல், செம்பொன்மாரி, சண்முகநாதபுரம், பொன்னிவயல், உஞ்சனை.

அண்ணா சாலை

 16-ந்தேதி ராமநகர், அழகப்பா பார்க், திருப்பத்தூர் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, அண்ணாசாலை, கார்ப்பரேஷன் ரோடு, எம்.எம்.நகர், விவேகானந்தபுரம், சம்பந்தர்தெரு, கருதாவூரணி டெலிபோன் எக்சேஞ்ச் ஏரியா, நாகாடி, பரம்பக்குடி, விஜயாபுரம், வாகைக்குடி, பாவனைக்கோட்டை செங்கற்கோவில்,
 17-ந்தேதி சிந்தாமணி, பாண்டனி, வேலாயுதபட்டினம், வேப்பங்குளம், வீரைமத்தினி, தில்லைநகர், சோமசுந்தரம் நகர், தாலுகா அலுவலகம், மற்றும் தீயணைப்பு நிலைய பகுதி,
 18-ந் தேதி ராமநகர், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சிவகங்கை ராஜா ரோடு நீதிமன்ற அலுவலக பகுதிகள், தாலிச்சாவூரணிரோடு, மாதா நகர், அம்மன் நகர், கண்டதேவி புதூர், அக்ரஹாரம், நடராஜபுரம், இரவுசேரி சித்தானூர், அனுமந்தகுடி, நானாகுடி, மனக்குடி, கத்தரி கீரனி, மீனாப்பூர், கண்டியூர், கே.சிறுவனூர், நாரணமங்கலம், தேவன்டதாவு, அண்டக்குடி, புதுவயல் கட்ட வளாகம். 19-ந் தேதி பூசலாகுடி, தாழையூர், கும்மனங்குடி, தேரளப்பூர், இலக்கினிவயல், சருகணி சாலை, அம்மச்சிஊரணி வேட்டிதெரு, ஏழுமலையான் ரைஸ்மில் பகுதி.
 இந்த தகவல் மின்வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story