சிவகங்கை,
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கான உணவு, உடை, உறைவிடம் வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் மாநில அரசு மானியம் பெறும் ஒருங்கிணைந்த வளாகங்கள் (ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லம்) தொடங்க விரும்பும் ஆர்வமுள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். முதியோர் இல்லங்கள் ஆரம்பிக்கும் இடம், இடத்தின் அளவு போன்றவற்றை உறுதி செய்து சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.