நாமக்கல்லில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்
நாமக்கல்லில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். முன்னதாக அங்கு 200 பேருக்கு மட்டும் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வளாகத்திற்கு வெளியே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏதுவாக நகராட்சி சார்பில் தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்கு முன்பு திரண்டனர். பின்னர் வளாகத்திற்குள் கூட்டம் குறைய குறைய அடுத்தடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சுகாதார நிலைய வளாகத்திற்கு வெளியே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதிகளவில் பொதுமக்கள் நிழற்குடையில் நின்றனர். இதனால் அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.இதனிடையே நேற்று காலை நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் போடுவதற்காக கோவேக்சின் தடுப்பூசிகள் வந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் நகர ஆரம்ப சுகாதார நிலையம், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட மாவட்டத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story