ராசிபுரம் அருகே டாஸ்மாக் கடை திருட்டில் 3 வாலிபர்கள் கைது சேலத்தை சேர்ந்தவர்கள்

ராசிபுரம் அருகே  டாஸ்மாக் கடை திருட்டில் 3 வாலிபர்கள் கைது சேலத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:57 PM IST (Updated: 11 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே டாஸ்மாக் கடை திருட்டில் 3 வாலிபர்கள் கைது சேலத்தை சேர்ந்தவர்கள்

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பால பகுதியில் முத்துக்காளிப்பட்டி டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. கொரோனா ஊரடங்கையொட்டி இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.48 ஆயிரத்து 100 மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போனது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்தநிலையில் முத்துக்காளிப்பட்டி டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை திருடியதாக சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ் (வயது 26), வெங்கடேஷ் (18), விக்னேஷ் (18) ஆகிய 3 பேரை ராசிபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
======

Next Story