தேவகோட்டை,
தேவகோட்டை பகுதி முழுவதும் மதுவிலக்கு பிரிவு போலீசார் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா?அல்லது சாராயம் காய்ச்சப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முனியய்யா பொட்டல் அருகே வாகன சோதனையின் போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரி மாநில 70 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி செல்வது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ராஜா, புதுக்கோட்டை சுந்தனாவூரை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தேவகோட்டையில் இருந்து அறந்தாங்கிக்கு கடத்தி சென்ற போது போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.