காரமடை அருகே ஜீப்பை மறித்த காட்டு யானை
காரமடை அருகே ஜீப்பை மறித்த காட்டு யானை
காரமடை
காரமடை அருகே உள்ள கோபனாரி, மூணுகுட்டை, அரக்கடவு கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
தற்போது அங்கு ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்பகுதி மக்கள் கோபனாரியில் இருந்து மூணுகுட்டை பகுதிக்கு ஜீப்பில் சென்றனர்.
அப்போது அங்கு வந்த காட்டு யானை அவர்கள் சென்ற ஜீப்பை வழிமறித்தது. உடனே ஜீப்பை ஓட்டியவர் பின்னால் எடுத்தார். இருந்தபோதிலும் அந்த யானை ஜீப்பை நோக்கி ஓடி வந்தது.
இதனால் அதற்குள் இருந்தவர்கள் அலறினார்கள். பின்னர் அந்த யானை சாலையை மறித்தபடி 1½ மணி நேரம் அங்கேயே நின்றது. பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
எனவே அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story